Pages

Monday, 28 January 2013

அமைப்புச் சொல் 1


அறிவியல் மற்றும் தொழிட்நுட்பப் பள்ளி

அமைப்புச் சொல்   1

உயர்நிலை 4

 பின்வரம் பயிற்சியை செய்து வகுப்பில் ஒப்படைக்கவும்.

மக்கள் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். கருத்துக்களைக் கூறவும் ,உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் மொழி உதவுகிறது. எனவே மொழியைப் பயப்டுத்தும் போது பிறர் அதனை கேட்டு  1.__________________________ வண்ணம் பயன்படுத்த வேண்டும். மொழியைத் தவறாகப் பயன்படுத்தினால் துன்பமே விளையும்.

பேசுகின்ற ஒரு சொல் கேட்பவரை மகிழ்விக்கும். 2.__________________________ சொல் அவருக்குத் துன்பத்தை உண்டாக்கும். ஒரு சொல் வெல்லும் மற்றொன்று கொல்லும். ஒன்றைப் பேசுவதற்கு முன் 3. __________________________ சொற்களைப் பயன்படுத்தி பேச வேண்டும். ஒருவர் பேசும் தவறான சொல்லால் அவர் பிறருக்குத் தன்பத்தை ஏற்படுத்துவதோடு தாமும் வருந்துவார். இக்கருத்தை வான்புகழ் கொண்ட 4. __________________________ தெளிவாக்க் சுறியுள்ளார்.

தம்மைவிட மூத்த பெரியவர்களிடம் பேசும் போது, அவர்களுக்குத் துன்பம் தராமல் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். அவர்களுக்கு மரியாதை 5. __________________________ அன்போடு பேச வேண்டும். நமது இலக்கியங்களில் சொல்லின் தனிச்சிறப்பை பலவிடங்களில் காணலாம். கல்வியில் பெரிய 6. __________________________ தன் இராமாயண காப்பியத்தில், பலவிடங்களில் சொல்லின் ஆற்றலை தெளிவுபட 7. __________________________ பல எடுத்துக்காட்டுக்களைக் கொண்டு விளக்கிட இயலும்.

அனுமன் இராம,இலக்குவனரிடம் சென்று அவர்களின் எடுப்பான 8. __________________________ கண்டு அவர்கள் வீரம் பொருந்தியவர்கள் என்று கண்டான். “வீரர்களே நீங்கள் யார் எனத் தெரிந்து வருமாறு என் தலைவன் கூறினான். நீங்கள் யார் என்று என் தலைவனிடம் கூற நீங்கள் கட்டளையிட வேண்டும்.” என்று 9. __________________________. தோற்றத்தைக் கொண்டே அவர்களை வீரர்கள் என காண்கிறான். கட்டளையிட வேண்டும் என்ற தொடரில் 10. __________________________ தன் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பால் உணர்த்துகிறான். இவ்வாறு மொழியை உயர்ந்த நோக்கில் பயன்படுத்த வல்லவரே பேச்சாற்றல் மிக்கவர் என்று கூறலாம்.

No comments:

Post a Comment